அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ‘பச்சை கொடி’!

Saturday, May 28th, 2022

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான  அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

தொலைபேசி ஊடாக இன்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-

000

Related posts:

எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது - ட...
ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...
நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க உடனடி நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!