அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் வடபகுதி மக்கள் !

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றதை அடுத்து வடபகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளதுடன் மக்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான பல்வேறு தேவைப்பாடுகள் முடங்கிக் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்று இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக பதவியேற்றதை அடுத்து தாம் இதுவரை கண்டுவந்த துன்ப துயரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வடபகுதி மக்களிடையே தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Related posts:
|
|