அமைச்சரகள் டக்ளஸ் தேவானந்தா – ஆறுமுகன் தொண்டமான் இடையே யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு!

Saturday, March 7th, 2020

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் சந்தித்து சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று(07) முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது வடக்கின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இருவரும் கலந்தாலோசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: