அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

அமரர் ஶ்ரீஸ்கந்தராஜா (சிறி ஐயா) அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையும் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான அமரர் கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் நேற்றையதினம்(09) கொழும்பில் காலமானார்.
கொழும்பு கல்கிஸையிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அவரது இழப்பால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், நண்பர்களுடன் உற்றார் உறவினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்
நேற்று மரணமடைந்த சிறி ஐயாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்துவதைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து இன்று காலை அவரின் பூதவுடல் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் நல்லூர் கோவில் வீதியில் வசித்துவந்த சிறி ஐயா என்று அன்பாக அழைக்கப்பட்ட கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா உடல்நலக் குறைவு காரணமாக நேற்றையதினம் காலமானார்.
Related posts:
|
|