அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் நீக்கம் கவலைதரும் விடயம்!

ஹற்றன், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து தொண்டமான் அவர்களது பெயர் நீக்கஞ் செய்யப்பட்டமையானது வேதனைதருகின்ற விடயமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறுகையில், மலையக மக்களின் வாழ்வுரிமை போராட்டம் முதற்கொண்டு அம் மக்களின் பல்வேறு உரிமைகள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் முக்கியமானவர். அத்தகையப் போராட்டங்களில் வெற்றியும் கண்டவர். தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்காக இறுதிவரை அயராது உழைத்த பெருமை அவரைச் சாரும்.
அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு அப்பாலும் அவர் இன்றும் அனைத்து சமூக மக்களாலும் மதிக்கப்படுகின்றார்.
எனவே, அவரது பெயர் நீக்க விடயமானது பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது. இது குறித்து பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர் மீள் பரிசீலனை செய்து, அவரது பெயரை மீள சூட்டுவதே மிகவும் பொருத்தமாகும்.
அந்தவகையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் தான் கலந்துரையாட விரும்புவதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு மே மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்…
எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ...
|
|
வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளை காப்பாற்ற வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் - வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்ச...
யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறி...