அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Friday, January 21st, 2022

அரசாங்கத்தினால் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்விற்கான கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில்  மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கு அமைய, கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தலா 3 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களும், வட்டாரங்களுக்கு தலா 4 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் எண்ணக்கருவிற்கு அமைவாக 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கு மக்கள் தங்களது விவசாய நிலங்களுடன்  கடல் வளத்தையும் இழந்து நிற்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்...
வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் வ...