“அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல” – எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம் இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 7th, 2021

“அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல . யுத்தத்தில் அழிந்த எமது பிரதேசங்களைக் கட்டியமைத்து மிளிரச்செய்தவர்கள் நாங்கள். எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம்  இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது”  என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 ஸ்டான்லி  வீதி அகலிப்பு பணிகளுக்காக வர்த்தக நிலைய உரிமையாளர்களின் இணக்கம் பெறப்படாமை தொடர்பாக சம்மந்தப்பட்ட வர்த்தகர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்நது.

இந்நிலையில், ஸ்ரான்லி வீதி கடைத் தொகுதிக்கு இன்று நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய காலநிலையும் வர்த்தகர்களின் ஒருமித்த கருத்தினையும் அடிப்படையாகக் கொண்டு விரிவான ஆலோசனைகளை நடத்தி அகலிப்புத் தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வரலாம், என்று தெரிவித்தார்.

Related posts: