அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக் கூட எமது மக்கள் வீதியில் இறங்கும் நிலையில் – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Thursday, October 25th, 2018

என்றாவது ஒரு நாள் இந்த நாடு முன்னேறும் என்று எதிர்பார்த்தால், நாளுக்கு நாள் இந்த நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி நிலைகளையே சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய நிலையில், இந்த நாட்டு மக்கள் இன்று முகங்கொடுத்துள்ள உயிர்வாழ்வதற்கான சவாலானது மிகவும் பாரதூரமானதாகவே காணப்படுகின்றது. இந்த பாரதூரத் தன்மையானது வடக்கு – கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் பல மடங்குகள் அதிகரித்த பாரதூரத்தையே சுட்டிக்காட்டி நிற்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நிதி, மதுவரி மற்றும் உற்பத்தி வரி சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மக்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லையா? என்று சிலர் கேட்கிறார்கள். சொந்தக் காணி, நிலங்கள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு, வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோரைக் கண்டறிதல், மகாவலி எல் வலயம், தொல்பொருள், வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள ஆக்கிரமிப்புகள் தொடர்பில் மட்டுமே வடக்கு மக்கள் தங்களது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அம் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லையா? என்றோரு கேள்வி எழுப்பப்படுகின்றது.

மறுபக்கத்தில், வடக்கு மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினையே அன்றி வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு இரு தரப்பினர் இருவேறு விதமாகக் கூறினாலும், இந்த அனைத்துப் பிரச்சினைகளும் அதனுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற பிரதான பிரச்சினையும் எமது மக்களுக்கு உண்டு.

எமது மக்கள் தங்களது அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் போராடுவதற்கு அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளும், உணர்வுசார்ந்த பிரச்சினைகளும் அம் மக்களுக்கான பிரதான சுமைகளில் இருந்து அம்மக்களை இன்னும் விடுவிக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Related posts:


கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
வந்தவர்கள் யாவரும் ஏமாற்றிச் சென்றனர் - உங்களையே நம்புகின்றோம்- இலுப்பைக்கடவை மக்கள் தெரிவிப்பு!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிள...