அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் வரவேற்பு உரையினை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போதே அவர் அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தியிருந்ததுடன் அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செய்ற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை இந்துமக்களின் மிக் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழாவில் பிரமர் மகிந்த நாஜபக்க்ஷ இந்துமுறைப்படி தனது பாரியாருக்கு நெற்றியில் குங்குமம் வைத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த நவராத்திரி விழாவில் இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமியும் கலந்துகொண்டிருந்ததுடன் சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.
அத்தோடு கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வில் பல அரசியல் பிரதானிகளும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், நவராத்திரிவிழாவில் இந்து சமயம் சார்ந்த பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
நாடளாவிய ரீதியில் பெரும் விமரிசையாக கொண்ட்டாடப்படும் நவராத்திரி விழாவானது, அலரிமாளிகையிலும் மிக சிறப்பாக இடம்பெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|