அனலைதீவு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Thursday, January 18th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தீவகத்தின் அனலைதீவு பிரதேசத்தில்  போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (19)  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குறித்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடுகின்றது.

இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வெற்றி வாய்ப்பை மக்கள் உறுதி செய்யும் பட்சத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டுமாணம் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமை பிரச்சினைகள் தொடர்பாகவும் இப்பகுதி மக்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: