அத்துமீறும் கடலட்டை பிடிப்பு விவகாரத்துக்குக் கிடைத்தது தீர்வு – கடற்றொழில் அமைச்சருடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷேட பேச்சுவார்த்ததை!

Friday, June 22nd, 2018

குடாநாட்டு கடற்பரப்பில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடலட்டை அறுவடையில் ஈடுபடுவதால் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரகவளமூல மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன். சாள்ஸ் நிர்மலாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கின் இதர கடற்பரப்பகளில் குறித்த மாவட்டத்தை சாராத புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்து கடலட்டை அறுவடை செய்வதால், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து போராட்டத்தை ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கடலட்டை அறுவடை செய்வது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இன்றையதினம் கடற்றொழில் நீரகவளமூல மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா  அவர்களுடன் குறித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழுவினர் சந்தித்து கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின்போது தொடர்ச்சியாக குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் ஏற்கனவே கடலட்டை அறுவடை செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின் பிரகாரம்

  • கரையிலிருந்து 5 கிலோ மீற்றருக்கு அப்பால் கடலட்டை அறுவடை செய்யவேண்டும் என்றும் –
  • இரவு நேரங்களில் குறித்த தொழிலை மேற்கொள்ள கூடாது என்றும் –
  • வேறுவகையான மீன்களை குறித்த தொழிலாளர்கள் பிடிக்கக் கூடாது என்றும் –
  • ஒரு படகில் இரண்டு சுழியோடிகளே சென்று குறித்த தொழிலிலீடுபட முடியும் என்றும் –
  • கடலுக்குள் இரவு நேரத்தில் மின் ஒளி (லைட்) பயன்படுத்த கூடாது என்றும் முடிவு எடுக்கப்பட்டதுடன் இது இன்று நள்ளிரவிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

020

Related posts: