அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, November 27th, 2020

அத்துமீறிய, சட்டவிரோத கடலிலும் உள்ளூர் நீர் நிலைகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்களை அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், எமது அமைச்சு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் (NARA) நிறுவனத்துடன் இணைந்து கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பில் ஒழுங்குவிதிகளை  வகுத்து வருகின்றது.

குறிப்பாக, இலங்கையின் அனைத்துக் கடற்பகுதிகளையும் ஆராய்ந்து, அந்தந்தப் பகுதிகளில் அறுவடை செய்யக்கூடிய மீனினங்களின் அப்படிடையில், அவற்றை பிடிப்பதற்கான முறைமைகளை வறையறை செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது முக்கிய நோக்கமாகும். இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கென போதிய ஆளணிகளை இணைத்துக் கொள்ளவுள்ளோம். இந்த ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டு, உரிய அனுமதிகளைப் பெறுவதற்கு முன்பாக, அது தொடர்பில் இந்த நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு அது குறித்து தெளிவுபடுத்துவதும் எமது நோக்கமாகும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அவற்றுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எல்லைத்தாண்டிய மற்றும் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவதை இல்லாதொழித்தல், கடற்படையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்பு அலகினை வலுப்படுத்தல், வெளிநாட்டு கடற்றொழிலாளர்களுடனான முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருதல் போன்ற முதன்மை பணிகளும் எம்முன் உள்ளன.

வெளிநாட்டு இழுவை வலைப் படகுகளின் எல்லைத்தாண்டியதும், தடைச் செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதும், கடல் வளத்தை அழிக்கினற மற்றும் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் சார்ந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவிப்பதுமான நடவடிக்கைகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு கிலோ கடலுணவை இழுவை வலைப் படகுகளின் மூலம் அறுவடை செய்கின்ற நிலையில் 18 கிலோ கடலுணவு வேளாண்மையின் ஆரம்ப கட்டங்கள் அழிக்கப்படுகின்றன எனவும், வருடந்தோறும் இவர்கள் எமது கடல் பரப்பிலிருந்து சுமார் 48 முதல் 50 வரையிலான மெற்றிக் தொன் கடலுணவுகளை அபகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பாரிய பிரச்சினைகயாகவே எமது கடற்றொழில் துறையில் தொடர்கின்றது. இது தொடர்பில் நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப் போல், பாக்கு நீரினைப் பகுதியில் கடல் வளம் தொடர்பிலான ஓர் ஆய்வினை இரு நாட்டினதும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்கொள்வதற்கும், அதன் பின்னர் அந்த ஆய்வின் பெறுபேறுகளுக்கு அமைவாக ஓர் முகாமைத்துவ அலகொன்றினையும் செயற்படுத்தும் திட்டம் இருக்கின்றது. எமது பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களுடன் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது இத் திட்டம் தொடர்பில் இந்தியப் பிரதமர் கௌரவ நரேந்திர மோதி அவர்கள் முன்னிலையில் நான் தெரிவித்தபோது, இத்திட்டத்தை இந்தியத் தரப்பினரும் வரவேற்றிருந்தனர்.

ஏற்கனவே, இலங்கை அரசுக்கும் இந்தியத் தரப்பினருக்கும் இடையில் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைகள் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மூன்று தடவைகள் இடம்பெற்றுள்ளன. அந்த பேச்சுவார்த்தைகளை மீள தொடரும் எதிர்பார்ப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். அந்த வகையில் கூடிய விரைவில் இப் பேச்சுவார்த்தை மீளத் தொடரப்பட்பட்டு, இப் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. ஏற்கனவே, கச்சதீவில் வைத்தும் இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களை முன்னிலைப்படுத்தியும் நான் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியிருந்த அனுபவமும் எனக்குண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் - மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா த...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையா...

சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட ...
சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா - டக்ளஸ் எம்.ப...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...