அத்துமீறிய கடற் தொழிற் செயற்பாடுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

Tuesday, December 5th, 2017

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வசதிகள் கருதி எமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவற்றையும் புதிய திட்டங்களையும் நான் முன்வைத்து வருகின்ற நிலையில் அவற்றில் பெரும்பாலானவற்றை செயற்படுத்தி எமது மக்களது நலனில் அக்கறை எடுத்து வருகின்ற கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுக்கு முதலில் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்தவகையில் நான் கடந்த வருட வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாத உரையின் போது முன்வைத்த முல்லைத்தீவு நந்திக்கடல் புனரமைப்பு மயிலிட்டித் துறைமுக புனரமைப்பு போன்ற திட்டங்கள் கௌரவ அமைச்சர் அவர்களால் சாத்தியமாக்கப்பட்டு கொடுக்கப்படவுள்ளன. தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த எல்லைத் தாண்டல் தொழிற் செயற்பாடுகள் அத்துமீறல் தொழிற் செயற்பாடுகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும் அவை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் மீளவும் முன்வைக்க விரும்புகின்றேன்.

மேலும; எமது கடற்றொழிலாளர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சிலவற்றை இங்கு கோரிக்கைகளாக முன்வைக்க விரும்புகின்றேன். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: