அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, April 3rd, 2018

அத்தியாவசிய மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் எவ்விதமான் கட்டப்பாடுகளும் இன்றி அதிகரித்துப் போகின்ற நிலைமை நாட்டில் காணப்படுகின்றது. இறக்குமதி மீன்களின் விலையேற்றம் காரணமாக, உள்நாட்டு மீன்களின் விலைகளும் அதிகரித்து விற்கப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான  விவாதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அண்மையில் சீமெந்து பெக்கெற் ஒன்றின் விலையானது 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. சீமெந்து விற்பனையாளர்களின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் இதன் மூலமாக நன்மை கிட்டியுள்ள நிலையில், ஏனைய சீமெந்து விற்பனையாளர்களுக்கு இது பெரிதும் அநீதியை இழைத்துள்ள விலை அதிகரிப்பாகவே இது காணப்படுகின்றது.

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான சீமெந்து பெக்கெற்றுகளாக இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கு மாத்திரம் நூற்றுக்கு 14 வீதமான செஸ் வரி விதிக்கப்பட்டு, 50 கிலோவுக்கு மேற்பட்ட சீமெந்து பெக்கெற்றுகளின் இறக்குமதிக்கு முன்பிருந்த வகையிலான நூற்றுக்கு 8 வீதமான செஸ் வரியே விதிக்கப்படுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, உரிய காலங்களில் உரிய நடவடிக்கை எடுத்து, பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாமல், அனைத்துக் காலங்களிலும் வரிகளை அதிகரித்துக் கொண்டிருப்பதில் மட்டுமே நீங்கள் அவதானம் செலுத்துவதாகவே தெரிய வருகின்றது – என்றார்

Related posts: