அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, May 23rd, 2020

கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை தொடர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் குறித்த விடயத்தினை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

கைதடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது யாழ். அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உரம் போன்ற அசேதனப் பசளைகளை குறைந்த விலைகளில் விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க செய்ய முடியும் என்ற கருத்தினையும் குறித்த பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துயைாடி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு விவசாயம் போன்ற சுய பொருளாதார திட்டங்களில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் - அருட்கலாநிதி ஜோசப் குணாளின்...
காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர...