அதிகூடிய விரைவான பொருளதார மறுசீரமைப்பு ஒன்றின் தேவையினை நாடு எதிர்பார்த்துள்ளது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018

பொருளாதாரத் துறையினைப் பொறுத்தவரையில் எமது நாடு மிகுந்த அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட தரப்படுத்துகை நிறுவனங்கள் எச்சரித்து வருகின்றன.

கடந்த வருடத்தில் நேர்மறையான கட்டமைப்பாகக் காணப்பட்ட எமது பொருளாதாரமானது, தற்போது எதிர்மறையான கட்டமைப்பாக மாற்றங் கண்டு வருகின்றது. இந்த நிலையில், நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போன்று ரூபாவின் பெறுமதியை பருவினப் பொருளாதாரக் காரணிகளின் மூலமாக பாதுகாத்துக் கொள்ளாமல், செயற்கையாக பாதுகாத்துக் கொள்வதானது  சாத்தியமற்ற விடயமாகும். நாட்டின் சேகரிப்பு நிதியின் அளவுடனேயே ரூபாவின் பெறுமதியானது அவதானத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதே நேரம், ஒரு நாட்டின் பொருளாதாரத் துறையின் அதீத வளர்ச்சியை பறைசாற்றுகின்றதும், உறுதியான நில ஆதன சந்தைக்கு வித்திடுவதுமான கட்டிட நிர்மாணத்துறையின் வளர்ச்சி வீதமும் தற்போது குறைந்து வருகின்றதான சூழ்நிலையினையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதற்கான ஆளணிப் பற்றாக்குறையானது உணர்ந்து அறியக்கூடிய வகையில் குறைந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தற்போது மணல் தட்டுப்பாடுகளும் பல பகுதிகளிலும் செயற்கையான முறையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த வருட இறக்குமதி செலவீனங்களைப் பார்க்கின்றபோது, பொறியியல் கருவிகள், சீமெந்து மற்றும் சீமெந்து சூளைக் கற்களின் இறக்குமதியிலும் வீழ்ச்சி நிலைமையே காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகூடிய விரைவான பொருளதார மறுசீரமைப்பு ஒன்றின் தேவையினையே இக்காரணிகள் யாவும் சுட்டிக் காட்டுகின்றன. அந்த வகையில் விரைந்து அதற்கான எற்பாடுகளை முன்னெடுக்குமாறும், அது கால வரையில் நான் மேலே குறிப்பிட்டுள்ள – தற்போதைய எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி நிலையில், பொருளாதாரத்தினை போதியளவில் வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும், அத்தகைய ஏனைய துறைகளையும் அவானத்தில் கொள்ளுமாறும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிர பொறுப்பு சட்டமூலம், கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமயமாக்கல் சட்டமூலம், வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

நீதிமன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கை வேண்டும்!
மக்களை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டு சென்றவர்களே இன்று அங்கு சென்று நீலிக் கண்ணீர் வடிப்பது வேதனைக்க...
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம...

வடக்கு - கிழக்கு மக்களுக்கும் வரப்பிரசாதமான மொரகஹகந்த - களுகங்கை நீர் விநியோகத்திட்டம்! ஜனாதிபதிக்க...
தேசிய நல்லிணக்கம் உணர்வுபூர்வமாக உருவாக்கம் பெறுவதற்கு படையினர் வசமுள்ள மக்களின் காணி நிலங்கள்  மீள ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ர...