அதிகாரிகள், அவலத்திலுள்ள மக்களுக்கு  மனிதாபிமான ரீதியில் பணியாற்றவேண்டும்!

Friday, June 2nd, 2017

தென் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பலியாகிவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, தமது உடமைகளையும்,வாழ்ந்த வீடுகளையும் இழந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்து தவிக்கின்ற மக்களுக்கு மருந்து, சுகாதாரம், குடிநீர், உணவு, உடை, உறைவிடம் என்பவற்றை உடனடியாகக் கிடைக்கச் செய்வதில் துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விஷேட மாநாட்டில் சுட்டிக்காட்டினேன்.

நாம்,நீண்டகாலமாக இடம்பெயர்வுகளுக்கும், அவலத்திற்கும் முகம் கொடுத்த மக்களுக்கு நிவாரணைப் பணிகளை முன்னெடுத்தவர்கள், அரச அதிகாரிகளுடன் இணைந்து இரவு பகலாக மக்களுக்கு அவசியமான உதவிகளை செய்தவர்கள் என்பதால்,இவ்வாறான சூழலில் மக்களை எவ்வாறு பராமரிப்பது என்பதும், அவர்களுக்கான நிவாரணப்பணிகள் எவ்வாறு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும்,அதில் ஏற்படக்கூடிய தவறுகள் எவையாக இருக்கும் என்பதையும் நாம் அனுபவ ரீதியாகவே தெரிந்தவர்கள். ஆகவே அந்த அனுபவங்களிலிருந்தே தற்போது தென் இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம் திட்டமிட வேண்டும்.

மக்கள் அனர்த்தத்திற்கு முகம்கொடுத்து ஏதிலிகளாகவும்,தமது தேவைகளுக்காக கை ஏந்தும் நிலையிலும் இருக்கும்போது,முக்கியமாக அரச அதிகாரிகள்,சுற்றறிக்கைளின் பிரகாரமே பணியாற்றுவோம் என்ற மனநிலையோடு பணியாற்றக்கூடாது. தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்பவும், மனிதாபிமானத்துடனும் பணியாற்ற வேண்டும். துஸ்பிரயோகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. பயனாளிகளை சரியாக அடையாளம் கண்டு,பாதிக்கப்பட்ட எல்லோரும் நன்மையடையக்கூடிய வகையிலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மீட்க முடியும்,அவர்களுக்கான உதவிகளை உரியவாறு பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க முடியும்.மீட்புப் பணியின்போது செயற்படுவதைப்போல், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்வரை பொறுப்புள்ள ஒவ்வொருவரும் அவசரகாலப் பணியாளர்களைப்போல் பணியாற்றுவது அவசியமாகும். அதேவேளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, மின்சார வசதி இல்லாமலும்,தொலைபேசி வசதிகள் இல்லாமலும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளவர்களைமேலும் தாக்கங்களில் இருந்து பாதகாக்கவும்,முன்னெச்சரிக்கைகளை வழங்கவும் அவர்களைச் சென்றடையக்கூடியவாரான விN~ட தகவல் பரிமாற்றப் பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தினேன்.

எதிர்காலத்திலாவது இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு முன்கூட்டிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பொறுப்பானவர்கள் அக்கறையோடு செய்யவேண்டும். அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தற்போது இவ்வளவு மரணங்களையும், அவலத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொண்டிருக்கும் தேவை ஏற்பட்டிருக்காது.

அனர்த்தங்கள் ஏற்பட்டபின்னர் நடவடிக்கைகள் தொடர்பாக சிந்திப்பதைவிடவும், அனர்த்தங்கள் ஏற்படுவதை முடியுமானவரை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நாம் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தேன்.

military-officials-landslide-village-bellana-kalutara-mission_7e8cd0c8-41fe-11e7-a718-97a052f84fc6 copy

Related posts:

மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை: நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு  டக்ளஸ் தேவான...
முல்லைத்தீவில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி - அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை!