அட்டைத் துப்பாக்கிகளை நிஜத் துப்பாக்கியாக்காதீர்கள் – கொற்றாவத்தையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 31st, 2020

மாணவர்கள் ஒவ்வொருவரும் தமது எதிர்காலம் நோக்கியதான பயணத்தை சிறந்த வகையில் உரவாக்கி  அதற்கான வழிமுறைகளை இனங்கண்டு அதன் வழிநோக்கிப் பயணித்து வெற்றி பெறவேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வழ மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை கொற்றாவத்தை ஆ.மி.த.க பாடசாலையின் விளையாட்டு விழா இன்றையதினம் பாடசாலையின் மைத்தானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரியல் வழ மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்தார்

மேலும் அமைச்சர் தெரிவிக்கையில் –

இந்தப் பாடசாலையின் விளையாட்டு விழாவில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர்.

குறிப்பாக இதில் ஒரு நிகழ்வாக இடைவேளை உடல்பயிற்சி கண்காட்சி நடைபெற்றது. இதை மாணவர்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சிறப்பாகச் செய்தார்கள். இதில் அட்டைத் துப்பாக்கிகளை பயன்படுத்தி நிகழ்ச்சியை மேற்கொண்டிருந்தார்கள். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இதே போன்று நாமும் அன்றைய தேவை கருதி நியமான அயுதங்களை கையாண்டிருந்தோம். ஆனால் இன்று அத்தகையதொரு தேவை எமது நாட்டில் தேவையற்றதொன்றாகிவிட்டது.

இன்று நீங்கள் அட்டைத் துப்பாக்கிகளை ஏந்தி நிகழ்வை மேற்கொண்டிருந்தீர்கள். ஆனால் இனியொருபோதும் நிஜத்துப்பாக்கிகளை ஏந்தக் கூடாது. அவ்வாறான ஒரு எண்ணமும் உருவாகக் கூடாது.

மாறாக அபிவிருத்தி மற்றும் உரிமைகளை நோக்கி சரியான தெரிவுகளுடன் உங்கள் எதிர்லா  வாழ்வுக்காக பயணிக்க உழைக்க வேண்டும். அதுவே சிறந்ததாகும் என தெரிவித்தார்.

Related posts:

கஜேந்திரன்குமார் குண்டர்களையும், வாள் வெட்டுக்குழுவையும்  நம்பி அரசியல் செய்கின்றார். ஈ.பி.டி.பி குற...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை மீண்டும் செயற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்!
தொடரும் மழையால் எள் செய்கை பாதிப்பு - இழப்பீடு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் குடாநாட்டு விவசா...

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் நிறையவே உள்ளன - வவுன...
திருமலை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!
முரண்பாடுகளை தவிர்த்து இடர் காலத்தை எதிர் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவோம் – நாட்டு மக்களுக்கு டக்ள...