அடிமைத் தனத்தை உடைத்தெறிய தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் மகாகவி பாரதியார் – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Saturday, September 11th, 2021

எமது மக்களிடையே காணப்பட்ட அடிமைத் தனத்தை உடைத்தெறிவதற்கும் மடமைத் தனங்களை ஒழித்திடவும் தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என குறிப்பிட்டுள்ளார்.

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100 ஆண்டு நினைவு தினமாகும். இந்நிலையில் இந்தியாவின் தேசிய கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100 ஆவது நினைவு தனத்தை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்றையதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதுவர் ராகேஸ் நட்ராஜ் செயபாஸ்கரன் மகாகவி பாரதிக்கு மலர்மாலை அணிவித்து நினைவு மலர்தூவி  மரியாதை செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் காணொளி செவ்வியினூடாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மகாகவி பாரதியாதருக்கு தனது மரியாதையை செலுத்தியிருந்தார். அதன் பின்னர் கருத்துரைக்கும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரின் 100 ஆவது நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் அவரை நினைவு கூருவதில் நான் பெருமையடைகின்றேன்.

இந்திய திருநாட்டின் சுதந்திரத்துக்காக தனது கவிதைகள் மூலமாக மக்களை தட்டியெழுப்பிய பாரதியார் தனது கவிதைகளின் மூலமாக உலகத்தின அதித கவனத்தையும் ஈர்த்துக்கொண்டவர்

மகாகவி பாரதியார் தனது கவிதையான அச்சமில்லை  அச்சமில்லை அச்சமில்லை என்பதே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற  போதிலும் என எமது மக்களின் அடிமைத்தனைத்தை உடைத்தெறிய பாடியதுடன் எமது மக்களிடையே புரையோடிப்போயிருந்த மடைமைகளை ஒழித்துடவும் தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார்.

இன்று அவரது 100 ஆவது நினைவு நாளில் அரது நினைவு நாளை மகாகவி நாளாக பிரகடனப்படுத்தி கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் பாரதியாரி படைப்புகளை எதிர்கால சந்ததியினருக்கும் உலகளாவிய மக்களுக்கும் கொண்டு செல்ல அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இந்தியாவின் தமிழ் நாட்டில் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்த பாரதியாருக்கு சிறு வயதிலேயே தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது.

ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கிய பாரதியார் தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார்

இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்றுமுதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றிருந்தார்.

1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பாரதியார் தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு வறுமை நிலையினை அடைந்தார்.

சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்த பாரதியார் பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கிய பாரதியார் 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார்.

‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்களும் பாரதியரால் எழுதப்பெற்றன.

இந்திய தேசத்தின் தந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.

பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.

அதுமட்டுமல்லாது விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார்.

இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றிருந்த பாரதியார் எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார்.  இதையடுத்து 1921 செப்டம்பர் 11 ஆம் தழகதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: