அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் – டக்ளஸ் எம்.பி.யிடம் புதுக்குடியிருப்பு கர்ணபுரம் மக்கள் கோரிக்கை!

Saturday, November 2nd, 2019

இறுதி யுத்தத்திற்கு கு முகம் கொடுத்து பல அழிவுகளை சந்தித்த எமது பகுதியின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் இதுவரை இப்பகுதி அரசியல் பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான நிரந்தர தீர்வுகளை தங்களால்தான் பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு. அந்த வகையில் எமது மக்களின் அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என புதுக்குடியிருப்பு கர்ணபுர மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கர்ணபுரம் குடியிருப்பு மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆரய்ந்தறிந்து கொண்டபோதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

எமது பகுதியில் யுத்தத்தின் பின்னர் பலர் அரசியல் தேவைகளுக்காக வந்து வாக்குறுதிகள் பலவற்றைக் கொடுத்து தமக்கான வாக்குக்குகளை பெற்றுச் சென்றனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் வாக்களித்த மக்களை திரும்பிப் பார்த்தது கிடையாது.

இவர்களது இந்த சுயநலன்களால் நாம் இழந்தது போதும். இனியும் அவர்களை நம்ப தயாரில்லை என தெரிவித்த மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்படுகளை கேட்டறிந்து கொண்டபின் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் –

எமது மக்களின் வாழ்க்கைமுறை சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

ஆனால் அத்தகைய ஒரு நிலையை உருவாக்க இதுவரை எமக்கு அரசியல் பலத்தை தமிழ் மக்கள் வழங்கியிருக்கவில்லை.

நாம் உங்களிடம் கோருவது என்னை நம்புங்கள். நான் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பு.
உங்களது எதிர்பார்ப்புக்களை என்னால் நிறைவு செய்துதர முடியும்.

என்னை நம்பி வாக்களித்த மக்களை நான் ஒருபோதும் கைவிட்டது கிடையாது .

அந்தவகையில் நான் கூறும் வழிமுறைக்கு நீங்கள் அணிதிரண்டு வாருங்கள். வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நான் ஆதரவு கோரும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றிக்கு உங்களது பங்காளர்களாகுங்கள்.
அந்த வெற்றியின் மூலம் நான் உங்களது அபிலசைகளை வென்றெடுத்து தருவேன் என்றார்.

Related posts:

பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்து...
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...