அடிப்படைவாத தமிழ்க் கட்சிகளே எமது மக்களின் பின்னடைவு களுக்கு காரணம் – மூத்த எழுத்தாளர் தெணியான் சுட்டிக்காட்டு!

Tuesday, August 1st, 2017

தமிழ் கட்சிகளும் அடிப்படைவாதிகளுமே எமது மக்களின் வாழ்வியல் பின்னடைவுகளுக்கு மட்டுமன்றி போதிய அபிவிருத்திகளின்மைக்கும் காரணம் என எழுத்தாளர் தெணியான் சுட்டிக்காட்டியுள்ளார்.

பருத்தித்துறை கொற்றாவத்தையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் மக்களின் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒரு கிராமத்தின் வளர்ச்சி அல்லது அபிவிருத்தி என்பது அந்தக் கிராமத்திலுள்ள கல்விப்புலம் சார்ந்த நிலைமைகளினாலேயே உருவாக்கப்படுகின்நது. அதனடிப்படையில்தான் கல்விக்கான முக்கியத்துவத்தை சகலதரப்பினரும் முக்கியத்துவம் வழங்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் அந்த மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசியல்வாதிகளும் பொறுப்புக்குரியவர்களாக இருக்கவேண்டும். வெற்றுப்பேச்சுக்களால் தேர்தல் காலங்களில் மட்டும் வெற்றியை தமதாக்கிக்கொள்ளும் அவர்கள் தேர்தலுக்கு பின்னரான காலங்களில் வாக்களித்த மக்களின் நலன்களை மறந்து செயற்படுகின்றமையானது மிகவும் துரதிஸ்டவசமானதே.

அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் நிகழ்காலத்தை அனுபவங்களாக கொண்டு எதிர்காலத்தில் மக்களுடன் நின்று மக்களுக்காக உழைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை வெற்றிபெறச் செய்வதே காலத்தின் கட்டாயமாகவும் உள்ளது.

தமிழ் மக்களின் ஆன்மீக வாழ்விற்கும் சாதாரண வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அரிய பல சேவைகளைச் செய்துவருபவர் டக்ளஸ் தேவானந்தா என்பதுடன் இதற்காக அவர் பல்வேறு சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்தும் வருகின்றார்.

அந்தவகையில் தேசியக் கண்ணோட்டத்துடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காண்பதற்காக தீர்க்கதரிசனத்துடன் முற்கூட்டியே அதற்கான திட்டங்களுடன் செயற்பட்டுவருகின்ற கரும வீரராக டக்ளஸ் தேவானந்தாவை நான் பார்க்கிறேன்.

மக்களினதும் சமூகத்தினதும் நலன்களுக்காக அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கும் இந்த மகத்தான தலைவரை தேர்தல் காலங்களில் எமது மக்கள் நினைவில் நிறுத்தி அவரது கட்சியை வெற்றிபெறச் செய்வதன் மூலமே எமது சமூகத்தில் கல்வி சுகாதாரம் மட்டுமன்றி கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து வளர்த்தெடுக்கவும் முடியும்.

இந்நிலையில் நாம் நம்பியிருந்தவர்களின் கால்களை எமக்கு இக்கட்டுவந்தபோது பற்றிப்பிடித்த வேளையில் எம்மை உதறித் தள்ளிவிட்டு தமது சுகபோக வாழ்க்கையில் கண்ணும் கருத்தமாக இருப்பதையும் நாம் எளிதில் மறக்கமாட்டோம். இந்நிலையில் எதிர்காலங்களில் அந்த சுயநல அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்க எமது மக்கள் தற்போது தயாராகி உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொற்ராவத்தை ஐரியப்புலம் ஶ்ரீமுருகன் ஆலய நிர்வாக சபைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வீதிகள் புனரமைப்பு சனசமூக நிலையம் கோயில் நிர்மாணம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் இரட்ணகுமார மற்றும் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோர் உடனிருந்தார்.

Related posts: