பொது வேலைத்திட்டத்திற்கு தயார் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 9th, 2016

விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் பொது­வே­லைத்­திட்­டத்­திற்கு விடுத்த அழைப்பு நிராகரிக்­கப்­பட்­ட­போதும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பாட்டில் தமிழ் பேசும் பிரதிநிதிகளுடன் பொது­வே­லைத்­திட்­டத்தில் செயற்­பட தயா­ராக­வுள்­ள­தாக ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்ளார்.

வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது நேர்காணல் தொடர்பான முழுமையான விபரத்தை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் பொது­வே­லைத்­திட்­டத்­திற்கு விடுத்த அழைப்பு நிராகரிக்­கப்­பட்­ட­போதும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பாட்டில் தமிழ் பேசும் பிரதிநிதிகளுடன் பொது­வே­லைத்­திட்­டத்தில் செயற்­பட தயா­ராக­வுள்­ள­தாக ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பு விடயம், ஈ.பி.டி.பி மீதான குற்­றச்­சாட்­டுக்கள், எதிர்­கால செயற்­பா­டுகள், வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள அபி­வி­ருத்தி திட்­டங்­களில் எழுந்­துள்ள சர்ச்­சைகள் தொடர்­பாக கேச­ரிக்கு அளித்த பிரத்­தியேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந டத்தும் குழுவில் நீங்கள் அங்­கத்­த­வ ரா­க இருக்கின்றீர்கள். உங்­க­ளு­டைய வகி­பாகம் எவ்­வாறு அமை­ய­வுள்­ளது?

பதில்:- பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு முத­லா­வது அமர்வு இடம்­பெற்­ற­தென்­பது வர­லாற்றில் பொறிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும். இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு முன்­ன­தாக மாறி­மாறி ஆட்­சி­யி­ல்­அமர்ந்த அர­சாங்­கங்கள் பேரி­ன­வா­தத்­தன்­மை­யு­ட­னேயே செயற்­பட்­டன.

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு பின்னர் தென்­னி­லங்­கைத்­த­லை­மைகள் குணாம்ச ரீதி­யான மாற்­றத்­துடன் செயற்­பட ஆரம்­பித்­தன. துர­திர்ஷ்ட வச­மாக அவ்­வப்­போது தமிழ் மக்­களின் தலை­வர்கள் எனக்­கூ­றிக்­கொண்­ட­வர்­களின் தவ­றான வழி­ந­டத்தல் கார­ண­மாக எமது மக்கள் முள்­ளி­வாய்க்கால் வரையில் செல்­ல­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. எண்­ணி­ல­டங்கா அழி­வுகள், சொல்­லி­ல­டங்கா துன்­பங்கள் துய­ரங்­களை சுமக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

குறிப்­பாக இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பின்னர் ரண­சிங்க பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்சி செய்­தார்கள். அத்­த­கைய தரு­ணங்­களில் பிர­தான எதிர்க்­கட்சி எதிர்ப்­பது என்­ப­தற்கு அப்பால் தமிழ்த் தலை­மைகள் அதனை எதிர்த்தும், எரித்தும் தட்­டிக்­க­ழித்­தன.

தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் அவ்­வா­றான­தொரு முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே கடந்த காலத்தில் நான் அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் இவ்­வா­றான­தொரு விட­யத்தில் பங்­க­ளிக்­க­க்கூ­டிய வகை­யி­லான பொறுப்பு எனக்கு காணப்­ப­ட­வில்லை. தற்­போது வழி­ந­டத்தல் குழுவில் நான் அங்­கத்­துவ உறுப்­பி­ன­ரா­கி­யுள்ள நிலையில் மக்கள் சார்ந்த பாரிய பொறுப்பு என்­னி­டத்தில் உள்­ள­தென்­பதை நான் நன்கு உணர்­கின்றேன்.

இந்­நி­லையில் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து தமிழ்த் தலை­மைகள் தொடர்ச்­சி­யாக இழைத்து வந்த தவ­று­க­ளுக்கு மீண்­டு­மொரு சந்­தர்ப்­பத்தை வழங்கி இட­ம­ளிக்­காத வகையில் தற்­போது வழி­ந­டத்திச் செல்வேன் என்ற நம்­பிக்கை எனக்­குள்­ளது.

கேள்வி:- தமிழ் மக்­களின் அபி லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டிய முக்­கிய விட­யங்கள் எவை­யெனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- தற்­போது அரி­ய­சந்­தர்ப்பம் எமக்கு கிட்­டி­யுள்­ளது. கடந்த காலங்­களில் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­பின்­றியே அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டன. அவ்­வா­றான நிலையில் இம்­முறை தமிழ் மக்­களின் பங்­க­ளிப்பும் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது.

எமது மக்­க­ளுக்­கான அபி­லா­ஷைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு ஒளிம­ய­மான பாது­காப்­பான எதிர்­கா­லத்தை அமைத்­துக்­கொ­டுக்­க­வேண்டும் என்­பதே விடுதலைப்புலிகளுக்கும் எமக்கும் இலக்காக இருந்தன. அந்த இலக்கில் பாரிய வேறு­பா­டுகள் இல்லை. ஆனால் அதனை அடைந்­து­கொள்­வ­தற்­கான பாதையில் வேறு­பா­டுகள் காணப்­பட்­டன. ஆயு­தப்­போ­ராட்டம், வன்­முறை எனச் சென்று முள்­ளி­வாய்­க்காலில் முடிந்­துள்­ளது.

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பின்னர் பாரா­ளு­மன்ற ஜன­நா­யக வழி­மு­றை­யூ­டா­கவே தீர்க்­கலாம் என்ற நம்­பிக்­கை­யி­லேயே நாம் ஆயு­தப்­போ­ராட்­டத்­தி­லி­ருந்து ஜன­நா­யக நீரோட்­டத்தில் இணைந்­தி­ருந்தோம்.

அன்­றைய காலத்தில் விடு­த­லைப்­பு­லி­களின் தள­ப­தி­க­ளா­க­வி­ருந்த கிட்டு, திலீபன் போன்­ற­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டும்­போது நாம் பொது வேலைத்­திட்டம் ஒன்றின் அடிப்­ப­டையில் செயற்­பட்டு நாட்­டையும் மக்­க­ளையும் விடு­விப்போம். இந்­திய அமை­தி­காக்கும் படை­யுடன் யுத்தம் புரி­வதை விடுத்து அவர்­களுடன் அர­சியல் ரீதி­யாக பேச்­சுக்­களை நடத்தி எல்­லை­யோ­ரங்­க­ளுக்கு அனுப்­பி­வைப்போம்.

அதன் பின்னர் நீங்கள் உங்­க­ளு­டைய கொள்­கை­க­ளையும் நாங்கள் எங்­க­ளு­டைய கொள்­கை­க­ளையும் மக்­க­ளி­டத்தில் முன்­வைப்போம். மக்கள் யாரைத் தெரிவு செய்­கின்­றார்­களோ அவர்கள் ஆளும் அதி­கா­ரத்தை பெறு­வார்கள் எனக்­கூ­றி­யி­ருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. மக்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளப்­போ­கின்­றார்கள் என்­பதை கூறி வழி­மு­றையை மாற்­று­வதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திய போது எமக்கு துரோ­கிப்­பட்டம் சூட்­டி­னார்கள். ஈற்றில் நாம் எச்­ச­ரித்­தது போன்றே இடம்­பெற்­றி­ருந்­தது.

தமிழ் தலை­மை­க­ளாக தங்­களை அடை­யாளம் காட்­டு­ப­வர்­களும் அதற்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்­ள­வேண் டும். அவர்­களும் பிழை­யான வழி­ந­டத்­த­லையே கொண்­டி­ருந்­தார்கள். இணக்க அர­சியல் ஊடா­கவே தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென நாம் தெளிவாக குறிப்­பிட்­ட­போது அதனை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஆனால் தற்­போது அதனை ஏற்­று­க்கொண்­டுள்­ளார்கள்.

தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் இணக்க அர­சி­ய­லி­லேயே உற­வு­களை வைத்­தி­ருக்­கின்­றார்கள். எதிர்க்­கட்சி பத­வி­யா­க­வி­ருக்­கலாம், குழுக்­களின் பிர­தி­த்த­லைவர் பத­வி­யாக இருக்­கலாம், இணக்க அர­சி­யலின் ஊடா­கவே பெறப்­பட்­டுள்­ளது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தற்­போது கூட மக்­களின் விட­யங்­களில் அவர்கள் அதீத அக்­கறை கொண்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. பத­விகள் மூலம் தமது தனிப்­பட்ட விட­யங்கள், நலன்­க­ளி­லேயே அக்­கறை கொண்­ட­வர்­க­ளா­க இருக்­கின்ற நிலை­மையே காணப்­ப­டு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கேள்வி:- அர­சியல் தீர்­வுக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தில் இரு வே­று­பட்ட நிலை­மைகள் காணப்­ப­டு கின்­றதே?

பதில்:- அர­சியல் தீர்வு என்ற விட­யத்­தினை கருத்­திற்­கொள்­ளும்­போது தென்­னி­லங்­கையும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் அதி­கா­ரப்­ப­கிர்வு அமை­ய­வேண்டும். அதற்­காக விட்­டுக்­கொ­டுத்துச் செல்­வதோ அல்­லது சர­ணா­க­தி­ய­டை­வதோ என்று அர்த்­த­மா­கி­வி­டாது.

தற்­போ­தைய தமிழ் தலை­மை­களின் கடந்த காலச் செயற்­பா­டு­களால் தென்­னி­லங்­கையின் நம்­பிக்­கையை முற்­றாக இழந்­துள்ள நிலை­மையே உள்­ளது. தற்­போ­தைய நிலையில் ஒற்­றை­யாட்சி என்றால் தமிழ் மக்­க­ளுக்கு பேயைப் பார்ப்­பது போன்­றுள்­ளது. சமஷ்­டி­யென்றால் சிங்­கள மக்­க­ளுக்கு பேயைப் பார்ப்­பது போன்­றுள்­ளது.

ஆகவே எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் ஒற்­றை­யாட்சி, சமஷ்டி போன்ற அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பான சொற்­ப­தங்­களை பயன்­ப­டுத்­து­வ­தாலோ பயன்­ப­டுத்­தாது விடு­வ­தாலோ பாரிய பிரச்­சினை காணப்­ப­டு­மென கரு­த­வில்லை. ஆனால் அதி­கா­ரங்­களால் மக்கள் மத்­தியில் பிள­வுகள் ஏற்­ப­டா­த­வ­கை­யிலும், ஐயப்­பா­டுகள் உரு­வா­காத வகை­யிலும் மீளப்­பெ­றப்­ப­டாத வகை­யிலும் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய வகையில் அவை உறு­தி­யா­ன­தாக அமை­ய­வேண்­டு­மென்­பதே முக்­கி­ய­மா­ன­தா­கின்­றது.

கேள்வி:- விடு­தலைப் போராட்ட காலங்­களில் பொது வேலைத்­திட் டத்தில் செயற்­பட விழைந்த தாங்கள் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு வாக்­கத்தில் தமிழ் பேசும் சமூகத்தின் சார்பில் பொது­வான கட்­ட­மைப்பில் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ரு­வீர்­களா?

பதில்:- தற்­போ­தைய நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மெனக் கூறு­கின்­றது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அர­சி­ய­ல­மைப்பில் சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­மென்றே கூறு­கின்­றது. இதில் குழப்­ப­மான நிலை­யொன்று காணப்­ப­டு­கின்­றது.

எமக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டையில் பிர­தா­ன­மாக அதி­கா­ரப்­ப­கிர்வு, தேர்தல் முறைமை ஆகிய 2 விட­யங்­க­ளி­லேயே பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் உள்­ளன. எது­எவ்­வா­றி­ருப்­பினும் நான் பொது­வே­லைத்­திட்டம் குறித்து நிச்­ச­ய­மாக அனைத்து தமிழ்­பேசும் தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன்.

முன்­ன­தாக தேர்தல் முறைமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்­லிம் ­காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ ­க­ணேசன் போன்­ற­வர்­க­ளுடன் பேச்­சுவார்த்தை நடத்­தி­யுள்ளேன். அவ்­வா­றான நிலையில் நான் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பாக எதிர்­கா­லத்தில் பொது­வே­லைத்­திட்­டத்தில் செயற்­ப­டு­வது குறித்து ஏனைய தமிழ் பேசும் தரப்­புக்­க­ளு­டனும் பேசுவேன்.

நான் கடந்த அர­சாங்­கங்களில் அமைச்­ச­ராக பதவி வகித்­தி­ருந்­தாலும் கூட எனக்கு அர­சி­யல்­ ரீ­தி­யான அதி­காரம் அதி­க­ளவில் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. கிடைத்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி எமது மக்­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை முறை­யாக வழங்­கி­யி­ருந்தோம். தற்­போது நல்ல சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. சிறந்த களம் காணப்­ப­டு­கின்­றது. யுத்தம் செய்த அர­சாங்­கத்­திடம் பெரி­தாக எத­னையும் எதிர்­பார்க்க முடி­யாது.

அவ்­வா­றான நிலையில் கடந்த காலங்­க­ளைப்­போன்று சந்­தர்ப்­பங்­களை தொடர்ந்தும் தட்­டிக்­க­ழிப்­ப­தற்கு இட­ம­ளிக்­காது வாய்ப்பை சரி­யாகப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக உரிய பொறி­மு­றைகள் ஊடாக முறை­யான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டிய தார்­மீக பொறுப்பு எனக்­குள்­ளது. அதன்பால் அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் எனது செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்கும்.

அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தும் குழு­வி­லுள்ள 21 பேரில் அர­சாங்­கத்­த­ரப்பு தவிர்ந்து 7 தமிழ் பேசும் பிர­தி­நி­திகள் காணப்­ப­டு­கின்­றார்கள். அவர்கள் அனை­வ­ரு­டனும் கலந்­து­ரை­யா­டலை நடத்தி இணைந்து செயற்­ப­டு­தற்கு தயா­ரா­க­வுள்ளேன்.

கேள்வி:- பர­ண­கம ஆணைக்­கு ழுவின் வடக்கு அமர்­வு­களின் போதும் உங்கள் அமைப்பின் மீது குற்­றச்­சாட் டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள அதே நேரம் ஆணைக்­கு­ழுவின் தலை­வரும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு மெ­னவும் பகி­ரங்­க­மா­கவே கூறி­யுள் ளாரே?

பதில்:- நட­ராஜா ரவிராஜ், தியா­க­ராஜா மகேஸ்­வரன், லசந்த விக்­கி­ர­ம­துங்க, பிரகீத் எக்­னெ­லி­கொட போன்ற அனை­வ­ரி­னதும் சம்­ப­வங்கள் தொடர்­பாக எம்­மையே குற்­ற­வா­ளி­க­ளாக கூறி­னார்கள். முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவின் படு­கொ­லையைத் தவிர அனைத்து அர­சியல் கொலை­க­ளையும் எமது தலை­க­ளி­லேயே சுமத்­தி­னார்கள். ஆனால் தற்­போது அவை தொடர்­பான விசா­ர­ணைகள் இடம்­பெற்று குற்­ற­வா­ளிகள் படிப்­ப­டி­யாக இனங்­கா­ணப்­பட்டு வரு­கின்­றனர்.

அதே­போன்று தான் காணா­மல்­போனோர் விட­யத்­திலும் எம்­மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கின்­றார்கள். உண்­மை­யி­லேயே சாட்­சி­யங்கள் வழங்­கப்­ப­டு­கின்­ற­போது எம்­மீது குற்­றச்­சாட்­டுக்­களை வழங்­கு­ப­வர்­க­ளி­டத்தில் விரி­வாக விசா­ர­ணை­களை செய்­வ­தில்லை. பொலி­ஸா­ரிடம் ஏன்­ மு­றைப்­பா­டு­களை செய்­ய­வில்லை எனக்­கோ­ரு­வ­தில்லை. கடந்த காலத்தில் நான் அமைச்­ச­ராக இருந்­ததன் கார­ணத்தால் பொலி­ஸா­ரி­டத்தில் முறை­யி­டு­வ­தற்கு அச்­ச­ம­டைந்­தோ­மெனக் காரணம் கற்­பித்­தாலும் தற்­போது ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் பகி­ரங்­க­மாக கூறிய பின்­ன­ரா­வது பொலி­ஸா­ரி­டத்தில் முறை­யி­டலாம் அல்­லவா?

அதே­நேரம் எமது அமைப்பு ஜன­நா­யக நீரோட்­டத்தில் இணைந்­ததன் பின்னர் நான் சில விட­யங்­களை அங்­கத்­த­வர்­க­ளி­டத்தில் கூறி­யி­ருக்­கின்றேன். குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் எவ்­வி­த­மான உற­வு­க­ளையும் வைக்­கா­தீர்கள் என்று கூறி­யுள்ளேன். உங்­க­ளு­டைய சகோ­தரன் அவ்­வ­மைப்பில் இருந்­தாலும் கூட அவர்­க­ளு­ட­னான பழக்­கத்தை கைவி­டுங்கள் என்றே கூறினேன். காரணம் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் உற­வு­களை பேணினால் அவர்­களின் காலைச்­சுற்­றிய பாம்­பாக மாறி ஈற்றில் அவர்­களின் இலக்­கா­க­வி­ருக்கும் என்­னி­டத்தில் வரு­வார்கள். ஆகவே அவ்­வா­றான விஷப்­ப­ரீட்­சைக்கு செல்­ல­வேண்­டா­மென்று கூறினேன். அதே­போன்று இரா­ணு­வத்­துடன் தோளில் கைபோ­டு­ம­ள­விற்கு செல்­ல­வேண்­டா­மென்றும் அறி­வு­றுத்­தி­யி­ருந்தேன். அத­னைத்­த­விர ஏனைய அனைத்து அமைப்­புக்­க­ளு­டனும் உற­வு­களை வைத்­தி­ருப்­ப­தற்கோ, பேசிப்­ப­ழ­கு­வ­தற்கோ நான் தடை­வி­தித்­தது கிடை­யாது.

எனக்கு தெரிந்­த­வ­கையில் எமது அமைப்பின் உறுப்­பி­னர்கள் எவ்­வி­த­மான தவ­று­க­ளைச்­செய்­வ­தற்கும் இட­ம­ளித்­தது கிடை­யாது. அவ்­வாறு செய்­தி­ருக்­கின்­றமை கண்­ட­றி­யப்­ப­டு­மி­டத்து உரிய நடவடிக்­கை­களை எடுத்து சட்டம் ஒழுங்கு, நீதித்­துறை சுயா­தீ­ன­மாக தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளித்­துள்ளேன். அதற்கு பல உத­ரா­ணங்கள் உள்­ளன.

ஆகவே குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்ப­வர்கள் அது தொடர்பில் பொலி­ஸா­ரி­டத்தில் முறை­யி­டா­தி­ருப்­பது ஏன்? அவர்கள் முறை­யிட்டு விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நான் ஒரு­போதும் தடை­யா­க இருக்­கப்­போ­வ­தில்லை. ஆனால் அவ்­வி­சா­ர­ணைகள் அர­சியல் ரீதி­யி­லான பழி­வாங்­க­லாக அமை­யாது சுயா­தீ­னத்­தன்­மை­யுடன் பக்­கச்­சார்­பற்­ற­தாக இருக்­க­வேண்டும்.

அதே­போன்று ஆணை­யாளர் டக்­ளஸ் தேவா­னந்­தாவின் ஈ.பி.டி.பி.மீது விசா­ரணை நடை­பெ­று­மென கூறி­யி­ருக்­கின்றார். ஆனால் ஏனைய அமைப்­புக்கள் தொடர்­பாக எத­னையும் கூற­வில்லை. நான் பல தட­வைகள் ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் ஆஜ­ராகி எம்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு நேரத்தை கோரி­ய­போதும் அதனை வழங்­க­வில்லை.

மேலும் எமது அமைப்பு மட்டும் விசா­ரணை செய்­யப்­ப­டு­மென கூறு­கின்றார். அவர் சாட்­சி­யங்­க­ளி­டத்தில் பெற்ற தக­வல்­களின் அடிப்­ப­டையில் அறிக்­கை­யொன்­றையே சமர்ப்­பிக்­க­வேண்­டி­யுள்­ளது. அவ்­வா­றான நிலையில் விசா­ரணை செய்­யப்­ப­டு­மென்ற கூற்றை எவ்­வாறு கூற­மு­டியும்? அதே­நேரம் எமது அமைப்பின் மீது மட்டும் விசா­ரணை செய்­யப்­ப­டு­மெனக் கூறு­வதால் ஆணை­யா­ளரும் அர­சி­யல் நிகழ்ச்சி நிரலில் செயற்­ப­டு­கின்­றாரா என்ற ஐயப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

கேள்வி:- ஐக்­கிய மக்கள் சுந்­திர முன்­னணி­யு­ட­னான பேச்­சு­வார்த்தை எவ்­வா­ற­மைந்­தது?

பதில்:- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு புதிய செய­லாளர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை எமது கட்­சி­யுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தார். கடந்த காலத்தில் தமிழ் மக்­களின் அர­சியல் உரிமை, அபி­வி­ருத்தி போன்ற விட­யங்கள் தொடர்­பாக எங்­களால் வென்­றெ­டுக்க முடி­யாத விட­யங்­களை நாம் தெளிவு­ப­டுத்­தினோம். முன்னர் எமது கோரிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தடை­யா­க இ­ருந்த அடிப்­ப­டை­வாத சக்­திகள் தற்­போது இல்­லாத நிலையில் அவற்றை பரி­சீ­லித்து எதிர்­கால நல்­லி­ணக்­கப்­ப­ய­ணத்தில் எவ்­வாறு செயற்­ப­டு­வது என்பது குறித்து ஆராய்ந்­தி­ருந்தோம். இந்­நி­லையில் தொடர்ந்தும் அது தொடர்பில் பேச்­சுக்­களை நடத்­து­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி:- வடக்கு, கிழக்கில் முன் னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம், சம்பூர் அனல் மின்­ நிலையம் போன்­ற­வற்றில் காணப்­படும் சர்ச் சைகள் குறித்து உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

பதில்:- எமது மக்கள் நீண்­ட­கா­ல­மாக நலன்புரி முகாம்களில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் இருக்கின்றார்கள். தற்போது அவர்கள் தங்கியிருக்கும் நலன்புரி முகாம்களின் நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் அதனை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் முயற்சிக்கின்றார்கள். ஆகவே அவர்களை மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அவ்வாறானவர்களுக்கு தற்காலிகத்தீர்வாக 65ஆயிரம் வீட்டுத்திட்டம் இருக்கின்றது. கொட்டில்களிலும், குடிசைகளிலும் வாழ்ந்தவர்களுக்கு இவ்வாறான வீடுகள் சொர்க்கலோகத்திற்குச் சமமானவை. தற்போது 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் 65ஆயிரம் வீடுகள் மக்களுக்கு கிடைக்காது போனால் மத்தியில் இணக்க அரசியலிலும் வடமாகாண ஆட்சி அதிகாரத்திலுமுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதற்கான பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அதேநேரம் குறித்த வீட்டுத்திட்டத்தின் பிரகாரம் வீடொன்றுக்கு 21இலட்சம் செலவிடுவதற்கு பதிலாக எமது கலாசாரத்திற்கும் சூழலுக்கும் அமைவான நிரந்தர வீடுகளை அம்மக்களுக்கு அவர்களுடைய பூர்வீக நிலங்களில் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும். இந்திய வீட்டுத்திட்டத்தை எமது மக்களுக்காக பெற்றுக்கொடுத்ததில் எனது பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்போது வரையில் ஆக்கபூர்வமான அபிவிருத்தி திட்டங்களை கூட தமிழ்த் தலைமைகளால் பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளது.

அதேபோன்று தான் சம்பூர் அனல் மின்நிலைய விடயமும். மக்கள் பல கருத்துகளை தெரிவிக்கின்றார்கள். அது தொடர்பில் தமிழ்த்தலைமைகள் ஆராய்ந்து பதிலளித்திருக்கவேண்டும். இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கவேண்டும். ஆனால் அதனைச் செய்வதற்கு தமிழ் தலைமைகள் தவறிவிட்டன என்பதற்கு அப்பால் இந்தியாவுடன் பேசுவதற்கு இவர்களுக்கு உள்ள அச்சமே காரணமாகவுள்ளது.

இந்தியா சம்பூர் அனல்மின்நிலைய திட்டத்தை ஒருபோதும் மாற்றாது. மாற்றுமாறு கோருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு கூட துணிவில்லை. அவ்வாறிருக்கையில் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைப்பதன் மூலம் அப்பிரச்சினைக ளுக்கான மாற்றீடுகளையாவது பெற்றுக்கொடுக்க முடியுமல்லவா?

DD

(நன்றி வீரகேசரி)

Related posts: