தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்…. ஈழப் போராட்டத்தில்  மறைக்கப்பட்ட உண்மைகள்…!

Monday, March 14th, 2016

தமிழர் உரிமை போராட்ட வரலாற்றின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் தமிழ் மக்களுடன் கூடவிருந்து மக்களுக்காக உழைத்து தன்மீது மேற்கொள்ளப்பட்ட பல கொலைத் தாக்குதல்களிலிருந்து மீண்டெழுந்து “பீனிக்ஸ்” பறவையாக  தமிழ் மக்களுக்கு பெரும்பணியாற்றிவரும் தோழர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான பல ஆக்கங்கள் வரலாற்று பதிவுகளாக எழுதப்பட்டு வருகின்றன.

அத்தகைய வரலாற்றுப் பதிவுகளுள் ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட  உண்மைகள்…! என்ற தொடரை எழுத்தாளர் மதிவண்ணன் எழுதி டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரபூர்வ முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டு வருகின்றது.

இந்த மறைக்கப்பட்ட வரலாற்று பதிவை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களது பார்வைக்காக பதிவிடுகின்றோம்….

ஈழப் போராட்டத்தில் 
மறைக்கப்பட்ட உண்மைகள்!

முகவுரை

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் கடந்த 41 வருடங்களுக்கும் மேலதிகமாக தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றிவருகின்றார்.

முதலில் சகல கமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராளியாகவும் சமூகத்தொண்டனாகவும், பின்னர் ஆயுதம் ஏந்திய போராளியாகவும், அரசியல் தலைவராகவும் அவர் ஆற்றிவரும் சேவைகளையும், தியாகங்களையும் தொடர்ந்தும்

அவதானித்துவருகின்றவர்களுக்கு, அவரைப் பற்றி நான் இங்கே பதிவு செய்திருப்பவை மிகை இல்லை என்பது புரியும்.

முக்கியமாக தமிழர் உரிமைப்போராட்ட வரலாற்றில் நடைமுறைச்சாத்தியமான மாற்றுவழிப் பாதையில் அவர் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்காக, அல்லது ஒரு திசைகாட்டியாக இருந்துவருகின்றார்.

தாயகத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் இணக்க அரசியல் வழி முறையை உறுதியோடு முன்னெடுத்தவர்.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இணக்க அரசியல் வழிமுறையை பின்பற்றியபோது, அதை சலுகை அரசியல் என்றும், எலும்புத்துண்டு அரசியல் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதூறு சுமத்தினார்கள்.

ஆனால் இன்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்த இணக்க அரசியல் வழிமுறையையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பின்பற்றி வருகின்றார்கள்.

காலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யதார்த்தம் நிறைந்த கருத்துக்களை தொடர்ந்தும் நிதர்சனமாக்கி வருகின்றது.

அவரது 41 வருட ஈழப் போராட்ட வரலாற்றை, கடந்த 24 வருடங்களாக மிக நெருக்கமாகவும், தோழமையோடும் அவதானித்து வருகின்றவன் என்பதால், அவரைப் பற்றிய எனது புரிதலையும், அவரிடம் நான் கண்டு வியந்த தோழமை, மனித நேயம், தியாகம், அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு என்பவற்றையும், அவர் கொண்டிருக்கும் நிதர்சனமான கருத்தியலையும் பதிவு செய்வதற்கு முற்படுகின்றேன்.

இந்த முயற்சியில், அவரோடு பழகியவர்கள், அவரைத் தெரிந்தவர்கள், அவரைப் பின்பற்றுகின்றவர்கள் என்று பலரிடமும் உரையாடி இருக்கின்றேன்.

இவற்றையும் கடந்து, எனது செவிகளுக்கு எட்டாமலும், எனது தேடலுக்கு பிடி படாமலும் இன்னும் ஏராளமான விடயங்கள் இருக்கலாம்.

எனவே தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைத் தெரிந்தவர்களும், அவரது கொள்கையோடும், கருத்தியலோடும் இணங்கியவர்களும், உங்களது கருத்துக்களையும் என்னுடன் இணைந்து பதிவு செய்ய முன்வர வேண்டுமென தோழமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.

எனது இந்த சவால்கள் நிறைந்த முயற்சிக்கு துணையாக மிக நெருக்கடியான காலகட்டத்தில், தமிழ் மக்களை நோக்கி தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிமை மடல்களாக எழுதிய கடிதங்களையும் வழித்துணையாக அழைத்துச் செல்கின்றேன்.

அந்தக் கடிதங்களில் அவர் கூறிய கருத்துக்களில் இன்றளவும் உயிர்ப்போடு இருக்கும் உண்மைகளையும், அதற்குப் பின்னரும் அவர் வெளிப்படுத்தி வரும் யதார்த்தம் நிறைந்த கருத்துக்களையும் இணைத்து உங்களுக்கு படைக்கின்றேன்.

இந்த முயற்சியை செழுமைப்படுத்தி எனது பயணத்தை சரியான திசை வழியில் தொடரவும் உங்களின் பங்களிப்புக்களையும் தோழமையோடு எதிர்பார்க்கின்றேன்.

தோழமையுடன்

மதிவண்ணன்.

ஈழப் போராட்டத்தில் 
மறைக்கப்பட்ட உண்மைகள்  தொடரும் ….

Related posts: