ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 10

Sunday, March 20th, 2016

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்

தந்தையாரிடம் அப்போது ஓர்இரட்டைக் குழல்
துப்பாக்கி இருந்தது – அனுமதிப் பத்திரத்துடன்!

முல்லைதீவு ஒட்டுசுட்டான் பகுதியில்
சிறியதொரு பண்ணையும் இருந்தது அவருக்கு!

இந்தப் பண்ணை மிகவும் அழகிய சூழலில்
அமைந்திருந்தது! அப்போது தோழருக்கு 15 வயதிருக்கும்!

இந்தக் காலக் கட்டத்தில் தோழருக்கு துப்பாக்கிச் சுடும்
பயிற்சி வழங்கதந்தையார் தீர்மானித்தார்!

அதனடிப்படையில் ஒரு முறை தனது பண்ணைக்கு
தோழரை அழைத்துச் சென்ற தந்தையார்
தற்காப்பு கருதி துப்பாக்கியை உபயோகிக்கக்
கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்!

தோழருக்குக் கிடைத்த முதலாவது துப்பாக்கி
அவரது தந்தை தந்தது! அதனை கையிலெடுத்த தோழர் –
அதனை பயன்படுத்துவது எவ்வாறு
என்ற திகைப்பில் அதனை ஆராய்ந்து பார்க்கலானார்!
அந்த நேரத்தில் – உலகிலுள்ள அனைத்துத் துப்பாக்கிகளையும்
தன்னால் பயன்படுத்த முடியுமாகும்
என்ற எண்ணம் தோழரின் மனதில் உதித்திருக்காது!

துப்பாக்கியின் பகுதிகள் –
அதனை பயன்படுத்தும் விதம் என்பவை தொடர்பிலான
அடிப்படைப் பயிற்சிகளை தந்தையார்
தோழருக்கு வழங்கினார்!

தந்தையிடமிருந்து கிடைத்த
இந்தப் பயிற்சிதான்
மிகக் குறுகிய காலத்தில் –
கெரில்லா யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படும்
ஏ. கே. 47,
ரி – 56,
போன்ற நவீன ஆயுதங்களைக்கூட
கண்ணிமைக்கும் நேரத்திற்குள்
கழற்றிப் பூட்டக்கூடிய
அதீத ஆற்றலை தோழருக்குக் கொடுத்தது!

(தொடரும்)

Related posts: