ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 8 – ஈழ நாடன்

Monday, March 14th, 2016
பல்கலைக்கழகத் தரப்படுத்தல் காரணமாக
மாணவர்களிடையே எதிர்ப்புப் போராட்டங்கள்
ஆரம்பித்து – மாணவர்களை ஓர்
அமைப்பாக இணைக்க தமிழ் மாணவர் பேரவை
ஓர் ஆரம்பப் படியானது!

 

இன்னுமொரு பக்கமாக சமூகத்தில் மேலும்
பல பிரச்சினைகள் வேரூன்றி இருந்தன!

 

‘அப்போது இனப் பிரச்சினை –
கல்வி –
சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் –
சாதிப் பிரச்சினைகள் – மதங்களுக்கிடையில் சச்சரவுகள் –
கோவில் பிரவேசங்களில் பாகுபாடுகள் –
போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகள் நிலவி வந்தன!

 

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக
பல்வேறு தரப்பினரும்
பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தனர்.

 

இவ்வாறு
பாதிக்கப்பட்ட பலரை நான் சந்தித்தேன்!
இப்படி நாங்கள் எல்லோரும் ஒன்று கூடினோம்!
கலந்துரையாடினோம்!

 

ஓர் அமைப்பாக உருவெடுத்து
அனைத்து அடக்கு முறைமைகளுக்கும்
எதிராகப் போராடினோம்’ என
தோழர் தனது ஆரம்பகால இயக்க ரீதியிலான
செயற்பாடுகள் குறித்து விபரிப்பதுண்டு!

 

அஹிம்சை வழியில், ஜனநாயக முறையில்
தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கும்,
தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கும்
பாரியளவிலான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும் –
அம் முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை.

 

இந்த நிலையை உணர்ந்து கொள்வதற்கு
தோழர் உட்பட்ட அப்போதைய இளைஞர்களுக்கு
அதிக காலமெடுக்கவில்லை!

 

இவ்வாறு இளைஞர்களும், யுவதிகளும்
அமைப்பு ரீதியாக
பாதிக்கப்பட்ட அனைவரினதும்
உரிமைகளுக்காக இணைகின்ற சந்தர்ப்பங்கள்
உருவாகிவந்த வேளை –
காவல்த்துறையின் கழுகுக் கண்களும்
இவர்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்தன!

 

இதன் காரணமாக
காவல்த்துறையினருக்கும், இளைஞர்களுக்கும் இடையில்
முறுகல் நிலைமைகள் சில ஏற்பட வழியேற்பட்டன!

 

இந்த இளைஞர்களது ஒன்றிணைவின் பிரதிபலனாக
1973ல் தமிழ் இளைஞர் பேரவையும் –
1975ல் ‘ஈழ விடுதலை இயக்க’மும் பின்னர்,
அதே வருடம் ‘ஈரோஸ்’ அமைப்பும் உருவாகின!

 

‘ஈரோஸ்’ அமைப்பு உருவாவதற்கான எண்ணக்கரு
லண்டனில் உதித்தது!
அதன் செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன!

 

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
கொழும்பில் இருந்தவாறே
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் உட்பட
மலையகப் பகுதிகளுக்குமான
செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

 

1978ம் வருடம் கிழக்கில் ஏற்பட்ட
சூறாவளி, புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு பெரும் உதவிகளை செய்வதில்
ஈரோஸ் அமைப்பு பாரிய பங்கினை ஆற்றியது!

 

ஈரோஸ் அமைப்பு உருவாவதற்கு முன்னரே
ஜனநாயக வழிமுறையில் மேற்கொள்ளப்பட்ட
ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகளுக்கு
காவல்த்துறையினரின் தடைகள் ஏற்படுத்தப்பட்டன!

 

இந்த நிலையில் இனப் பிரச்சினையும்
கூர்மையடைந்து வந்தது!
எனவே,
இவ்வாறான அனைத்து அடக்குமுறைகளுக்கும்
முகங்கொடுப்பதற்காக
இளைஞர்கள் ஆயுதமேந்தத் தீர்மானித்தனர்.
(தொடரும்)

Related posts: