ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 13

Tuesday, April 5th, 2016

1977ம் வருடப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியானது தமிழ் இளைஞர்களிடையே தனி நாட்டுச் சிந்தனையை ஆழமாகவே விதைத்துவிட்டது!

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள்தனித் தமிழ் ஈழத்திற்குக் கிடைத்த வரமென
தமிழ் இளைஞர்கள் பலரும்சிந்திக்கத் தலைப்பட்டனர்!

இதனிடையே வடக்கில்இளைஞர்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் சில மோதல் சம்பவங்கள் ஆரம்பமாகின்றன!

1977 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாடாளவிய ரீதியில் தமிழ் மக்களுக்கெதிரான கலவரமொன்று
கட்டவிழ்த்து விடப்பட்டது!

இதன் பிரதிபலிப்பாக 1977ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி மாலை  யாழ். புனித பற்றிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றதொரு கானிவெல் நிகழ்வைத் தொடர்ந்து
பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியது!

தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த பொலிஸார் மறு நாள் – 15ம் திகதி மாலைஇப் பிரச்சினையை பெரிதுபடுத்திவிட்டனர்!

பொது மக்கள் தாக்கப்பட்டனர் -வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன -பாதைகளில் ரயர்கள் போட்டு எரியூட்டப்பட்டன -பொலிஸார் சுட்டதில் நான்கு பொது மக்கள் பலியாகினர்!

‘போர் என்றால் போர்சமாதானம் என்றால் சமாதானம்’ என ஜே. ஆரின் அரசு இனக் கலவரத்திற்கு தூபம்
போட்டது!

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுசுமார் 1500 மக்கள் தென்னிலங்கையிலிருந்து’லங்கா ராணி’ கப்பல் மூலம்
காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தனர்!

இந்த நிலையில் மார்க்சிஸவாதக் கண்ணோட்டத்தைக் கொண்டஈரோஸ் இயக்கம்
சர்வதேச தொடர்புகளுடன் செயற்பட்டு வந்தது!

புலம்பெயர் இளைஞர்களில்மிக அதிகளவிலான இளைஞர்களின் அவதானத்தை ஈர்த்துக் கொண்ட  இயக்கமாக ஈரோஸ் இயக்கம் ஆரம்பந் தொட்டே இயங்கி வந்தது!

(தொடரும்)


கூத்தாடிகள் கைகளில் வடக்கு மாகாண சபை!
தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர் ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…… - தொடர். 03
தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்” - பாகம் – 4
மக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது - ச...
தமிழ் தலைமைகளின் தவறுகளால் தமிழ் மக்கள் மீண்டும் நெருக்கடியில் - டக்ளஸ் எம்.பி.