வடமாகாணசபையை அபகரித்தவர்கள் மலர்ந்தது தமிழரசு என்று சொன்னது இதுதானோ?

Sunday, March 6th, 2016

 

ஒன்றுசேர் தமிழா!….

ஊருக்குஉபதேசம்

உனக்கல்லடிசீமாட்டி!..

மக்களின் மறதிதான்

அரசியல் தலைமைகளுக்கு

மகிழ்ச்சிக்கொண்டாடம்!

 

தேர்தல் காலங்களில் அரசியல் தலைமைகள்

அள்ளிவீசும் வாக்குறுதிகளை

தேர்தலின் பின்னரும் மக்கள்

மறந்துவிடாதிருக்கும் வரம் பெறவேண்டும்.

 

என்னவோதெரியாது ஒவ்வொரு

தேர்தலின் போதும் அரசியல் தலைமைகள்

வாசல் தேடிவந்து வழங்கும் வாக்குறுதிகளை

தேர்தலின் பின்னர் மக்கள் மறந்தேபோகிறார்கள்.

 

இதனால் யானைதன் தலையில் தானே

புழுதி அள்ளி வீசி அழுக்கை சுமப்பது போல்..

மாற்றத்தை விரும்பிவாக்களித்த மக்களும்

ஏமாற்றத்தையே இது வரைசுமந்துவருகிறார்கள்.

 

தமிழா ஒன்று சேர்…

ஒற்றுமையின் பலத்தைஉலகிற்குகாட்டு

இப்படிஉணர்ச்சிபொங்க கூச்சலிட்டு

வாக்குகேட்டுவந்துவெற்றிபெற்றவர்கள்

தாம் மட்டும் தமக்குள் குடுமிச்சண்டைபோடலாமே?..

 

வடமாகாணசபையை அபகரித்தவர்கள்

மலர்ந்தது தமிழரசு என்றும் இது தமிழரின்

ஒற்றுமைக்கு கிடைத்த வாய்ப்பு என்றும்

சுந்தரவசனம் பேசிஏ க்காளமிட்டனர்.

 

ஆனாலும் இன்று என்ன நடக்கிறது?

மாகாணசபைக்குவந்த நிதி வருடந்தோறும்

திறைசேரிக்கு திரும்பிபோகிறது.

தட்டிக்கேட்டால் அரசும் ஆளுனரும்

தடைஎன்றுஅன்று சொன்னார்கள்.

 

ஆனாலும் ஆட்சிமாறி ஆளுனரும் மாறி

புதியசூழல் ஒன்று இங்கு மலர்ந்திருக்கிறது.

இருந்தும் வந்தநிதி இன்னமும்

திறைசேரிக்குதிரும்பித்தான் போகிறது.

வாக்களித்த மக்கள் வானம்பார்த்த பூமிபோல்

ஏமாந்ததுயரத்தில் துவண்டுகிடக்கிறார்கள்.

இதற்குள் வந்தநிதியை செலவளித்தோம் என்று

திருட்டுக் கணக்குகாட்டும் தில்லுமுல்லுகள் வேறு.

எங்கே?.. எதற்கு?.. எப்படிசெலவளித்தீர்கள்?…

கணக்குகேட்டால் அதற்குபதில் இல்லை.

வடக்குமாகாணசபை

கைதடி கட்டிடமாகாணசபையாக

சுருங்கிக்கிடக்கிறது.

 

சொகுசுவாகனங்கள் தேவைஎன்று

சொந்தசலுகை கேட்டு

ஒன்று கூடி கொழும்பு நோக்கி

புறப்பட்டுபோகிறார்கள்.

ஆனாலும் தமிழரின் உரிமைக்கு

முதற்படியாக கிடைத்தமாகாணசபைக்குள்

இவர்களே தமக்குள் தாமே குத்துவெட்டு

சண்டைபோட்டு கூச்சலிட்டு பிரிந்துநிற்கிறார்கள்.

 

முன்னர் அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக

நம்பிக்கையில்லா தீர்மானங்கள்.

இன்று தமக்குள் தாமே முரண்பட்டு

தம்மவர்களுக்கு எதிராகவே

நம்பிக்கையில்லா தீர்மானங்களை

கொண்டுவருகிறார்கள்.

 

அதிகாரத்தை தமிழரின் கையில்

ஒருமுறைகொடுத்துப்பார்!

அவர்கள் தமக்குள் தாமேசண்டையிட்டு

அவர்களே சிதைந்து போவார்கள் என்று

யாரோசொன்னஞாபகம்.

 

சொன்னவர்கள் யாராகவும் இருக்கட்டும்.

எதிரி எதைவிரும்புகிறானோ

அதை நீ செய்யவிரும்பாதே என்ற

நல்ல புத்தியைகேட்டுசெயலாற்ற

நம்மவர் இங்குதயாரில்லை.

 

ஆக மொத்தத்தில்

தமிழா ஒன்றுசேர் என்ற

உணர்ச்சிக்கோசங்கள்

வெறும் தேர்தல் வெற்றிக்காகமட்டுமே.

கைதடிக் கட்டிடமாகாணசபைக்குள்

கூடிக் குளறி கூச்சலிட்டு

தமக்குள் தாமேசண்டைபோடும்

இவர்கள்.

 

தேர்தல் காலத்தில் எழுப்பிய

தமிழர் ஒற்றுமை கோசம்

ஊருக்கு உபதேசம் உனக்கல்லடிசீமாட்டி

என்பதுபோலவே!….

நன்றி!

மறுபடியும் மறுமடலில்

சந்திப்போம்!…

Related posts: