தேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட செய்தி!

Thursday, June 7th, 2018

வாக்காளப் பெருமக்களே!

யூன் 1 ஆம் திகதி வாக்காளர் தினம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

வாக்கு உங்கள் உரிமை!… வாக்குரிமையே உங்கள் பலம்!!…

எனவே இதுவரை நீங்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளவில்லை என்றால் உடனடியாக உங்கள் கிராம சேவகரை தொடர்பு கொண்டு உங்கள் வாக்குரிமையை பதிவுசெய்து கொள்ளுங்கள்.

எனவே 2018 யூன் 1 ஆம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த, தகுதியான இலங்கை பிரஜைகள்  அனைவரும் சாதாரண வதிவை கொண்டிருக்கும் முகவரியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.

கிராம அலுவலர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர்களை கணக்கெடுக்கும் படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து பிரதேசத்தின் கிராம அலுவலரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.

வருடாந்தம் பதிவு செய்து கொள்ளும் வாக்காளர்கள் மாத்திரமே தேர்தல் ஒன்றின் போது வாக்களிக்க முடியும்.

“இது தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்கும் செய்தி”

Related posts: