செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ தவிசாளர் அவர்களே!

இந்தச் சபையிலே இருக்கின்ற “கூத்தக் கட்சியினுடைய சில உறுப்பினர் கள் சம்பந்தமாகத்தான் நான் என்னுடைய கருத்துக்களை இங்கு சொல்ல முற்படுகின்றேன். தற்போது இங்கு சமூகமளித்திருக்கின்ற உறுப்பினர் சம்பந்தமாக எனக்கு முரண்பாடான அல்லது மாறுபட்ட அபிப்பிராயம் இல்லை. ஏனெனில் அவர் நீண்ட காலமாகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர். எனக்கு அவருடைய நிலைமை நன்றாகத் தெரியும். சற்று முன்பு எழுந்து சென்றவர்கள் கூட அவ்வாறான ஒருவர்தான் ஆனால் அதைவிடவும் தமிழர்களுடைய போராட்டத்தோடு சம்பந்தப்படாதவர்கள்தான் இந்தச்சபைக்குப்பின் வாசல் வழியாக வந்திருக்கின்றார்கள். ஓர் அரசியல் கட்சியைக் சேர்ந்தவர்கள் என்ற வகையில் நான் இந்தக் கருத்தைச் சொல்ல வரவில்லை. திரு.சம்பந்தன் அவர்கள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமாகவும் ஈ.பி.டி.பி. கட்சி தவறான கருத்துக்களை சில அபிப்பிராயங்களைச் சொல்லியிருந்தார்.

“இந்தச் சபைக்குத் தவறான கருத்தக்களைக் கூற வேண்டாம் “ என்று நான் குறிக்கிட்டபோது, அதைப்பொறுக்கமுடியாமல்தான் அவர்களுடைய பக்கத்தில் இருந்து கூச்சல் எழுந்தது, வன்முறைகள் நிறைந்த தேர்தலாகத்தான் அத்தேர்தல் நடந்தேறியது. மேலும் இறந்தவர்களுடைய வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களுடைய மற்றும் வயோதிபர்களுடைய வாக்குகள்கூட கள்ளத்தனமான முறையிலே போடப்பட்டிருக்கின்றன.அதாவது சிறுவர் – சிறுமியர்கள் வயோதிபர்களாகவும் இறந்தவர்கள் உயிர்பெற்ற வந்தது போன்றும், புலம்பெயர்ந்தவர்கள் தேர்தல் அன்று வந்து தேர்தலில் கலந்துகொண்டது போன்றதுமான நிகழ்ச்சிகள்தான் அன்று நடந்திருந்தன. இதை நான் சொல்லவில்லை. சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அறிக்கைகள் தெளிவாகச் சொல்கின்றன.நான் சொல்வதாக இருந்தால் அது ஈ.பி.டி.பி. கட்சியுடைய அரசியல் நலன்களைக் கருதிச் சொல்லப்பட்டதாகக் கருதப்படும்.

அதைப்போல 1994 ம் அண்டு நடைபெற்ற தேர்தலைப் பற்றியும் அவர் சொல்லியிருந்தார். 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைப் புலிகள் பகிஷ்கரித்தது மாத்திரமல்ல, அந்தத் தேர்தலில் யாராவது போட்டி போட்டால் தேசத்துரோகிகளாகக் கருதப்பட்டு அவர்கள் கொல்லப்படுவார்கள் எனவும் விடுதலைப்புலிகள் அப்போது அறிவித் திருந்தார்கள். ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் “ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு”  என்ற அரசியல் இலக்கை நோக்கி நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தபடியால் அந்தத் தேர்தலில் பங்கெடுப்பதென முடிவெடுத்தோம்.

அந்த வகையில் எங்களோடு வேறு சில அரசியல் கட்சிகளும் பங்கெடுத்திருந்தன. யாழ்;ப்பாண மாவட்டத்துக்கான தேர்தலைப் பொறுத்த வரையில் தீவுப் பகுதி மாத்திரந்தான் அன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தபடியால் இங்கு மாத்திரந்தான் அந்தத் தேர்தலை நடத்தக் கூடியதாக இருந்தது.அந்த வகையில் எங்களோடு வேறு சில அரசியல் கட்சிகளும் பங்கெடுத்தன. யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேர்தலைப் பொறுத்த வரையில் தீவுப் பகுதி மாத்திரம்தான் அன்று அரச கட்டுப்பாடுப் பகுதியாக இருந்தபடியால் இங்கு மாத்திரம்தான் அங்கு தேர்தலை நடத்தக்கூடியதாய் இருந்தது. அந்த வகையில் அங்கிருந்த மக்களில் பத்தாயிரம் பேர் அளவில்தான் அந்த வாக்களிப்பில் கலந்து கொண்டார்கள். அவர் சொன்ன ஐந்து வாக்குள் பத்து வாக்குகள் என்பது இடம்பெயர்ந்தவர்கள் அளித்த வாக்குகளாகும். அதாவது அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு – கிழக்கிற்கு வெளியில்  – யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளியில் கொழும்பு மாநகரத்தில் இருந்தவர்கள்தான் அந்த வாக்குகளை அளித்தார்கள். உதாரணத்திற்கு பருத்தித்துறைத் தேர்தல் தொகுதியில் 50ஆயிரம் வாக்காளாகள் இருந்தார்கள் என்றால் அவர்களில் 50பேர் கொழும்பில் வசித்திருந்தாhகளென்றால் அந்த 50பேரில் வாக்களிக்கின்ற உரிமை இருந்த பத்துப் பேர் தமது வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். அந்;த மாதிரியான வாக்குகளே அந்த ஐந்தும் பத்துமாக அளிக்கப்பட்ட வாக்ககளே தவிர மக்களுக்கு வாக்களிக்க விரும்பமின்மையால் அல்ல.

அன்று தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகள் புலிகளால் பலாத்கரமாக மறுக்கப்பட்டிருந்தன. அதேநேரம் அங்கிருக்கின்ற புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளுடைய தலைவர்கள் கொல்லப்பட்டதும் புலிகளால்தான். அது அவர்களுடைய தகப்பனார் குமார் பொன்னம்பலம்கூட புலிகளால்தான் கொல்லப்பட்டார்.

(திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம்)

Sir, I want to make a correction. He mentioned my name. If he is trying to say that the LTTE  Killed my father, let me say categorically that I have absolutely no belief in that, Let me also say this. Let him try and give an answer to this. I accuse –

For killing my father Let him anser that.

நீங்கள் அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும். ஆனால், கடந்த அரசாங்கத்தின்  Pயு அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்கள்.என்னுடைய விவாதம் என்னவென்று சொன்னால் Pயு அரசாங்கம் அதைச் செய்யவில்லை. Pயு அரசாங்கம் அதைச் செய்திருக்குமாகவிருந்தால் ருNP அரசாங்கம் வந்த பொழுது அந்த அரசாங்கத்தின் மூலம் அதனை விசாரித்திருக்கலாம் என்பதுதான். (இடையீடு)

தன்னுடைய தகப்பன் புலிகளால் கொல்லப்பட்டதை தன்னுடைய அரசியல் ஆதயத்துக்காக மறுத்து, இன்று அவர் பின்வாசல் வழியாகப் பாராளுமன்றம் வந்திருக்கின்றார் என்பது தான் உண்மை.(இடையீடு)

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் இடைக்கால நிர்வாகத்தைக் கேட்கவில்லை. அவர்களுடைய கோரிக்கையில் இருந்தோ அவர்களுடைய தேவையில் இருந்தோ இந்தக் கோரிக்கை எழவில்லை. புலிகள் தங்களுடைய சுய இலாப அரசியலுக்காத்தான் இன்று இடைக்கால நிர்வாகத்தைக் கேட்கின்றார்களே ஒழிய, மக்களின் நலன்களுக்காகவோ அல்லது அவர்களுடைய தேவகைளுக்காகவோ அல்ல.

தமிழ் மக்களைப்  பொறுத்த வரையில் நாங்கள் ஒரு காலகட்டத்தில் இடைக்கால நிர்வாகத்தைக் கேட்டோம். ஏனென்று சொன்னால் யுத்தம் நடந்து அன்று மக்களுடைய நாளாந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு தளம் தேவைப்பட்டதனால்;தான் அந்த வகையில்தான் நாங்கள் அதைக் கேட்டோம். அதைவிட ஓர் அரசியல் தீர்வை முன்னெடுக்கும் நோக்கத்துடன் அது கேட்கப்பட்டதே ஒழிய சுய அரசியல் இலாபத்திற்காகவோ தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்காகவோ அல்ல என்பதையும் இங்கு கூறிக் கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

 20 மே 2000

Related posts:


குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...
அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் - மதிக்கப்படும் சூழலை உருவாக்க வாருங்கள் நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...